ரஜினி இருந்தாரே, யாராச்சும் பாத்தீங்க? :அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

நாட்டுல நல்லதை மட்டுமே பண்ண அரசியல் கட்சியெல்லாம் சைலண்டா தான் இருக்கு. ஆனா, ரெண்டு வருசம் ஆட்சியை தக்க வெச்சதையே சாதனையா பேசிக்கிட்டு இருக்க அதிமுக பன்ற அலம்பல் தாங்க முடியலப்பா. அந்த ரோடு என்ன விலை? இந்த பிளாட்டு என்ன விலை? அந்த ஊர் என்ன விலை? அப்டின்னு கேட்டுட்டு இருக்காங்க. சார், ஆல்ரெடி உங்க கட்சிக்காரங்க அதையெல்லாம் ஆட்டைய போட்டுட்டாங்கன்னு சொல்ல கிளம்பி போய்கிட்டு இருந்தேன். வழில பாத்தா, ரஜினி வீட்டு வாசல்ல ஒரே கூட்டமா இருந்துது. என்னதான் அந்த மனுசன் வந்து பாக்கலன்னாலும், எப்பவுமே அவரைப் பாக்க கூடி நின்னும் கூட்டத்தை நினைச்சு ஆனந்த கண்ணீர் விடும்போதே, முதல் வரிசைல இருந்து ஒரு குரல். ‘போர் வரும்போது அரசியலுக்கு வர்றேன்னியே தலைவா. நம்மாளுகள கொண்டுபுட்டாய்ங்க. உடனே வந்து லெஃப்ட் ஹேண்ட்ல ஆட்சியை கலைச்சு, ரைட் ஹேண்ட்ல தீவிரவாதிகளை அடக்கி எங்களைக் காப்பாத்து’ அப்டின்னு தீவிர ரசிகர் ஒருத்தர் ஒரு ஷார்ட் ஃபிலிமே எடுத்துட்டு இருந்தார். இது என்ன விஜயகாந்த் படமா? நாட்ல எங்க பிரச்சினைன்னாலும், ரஜினியை கூப்புட்டு ஆஜர் பண்றதுக்கு. சரி, நான் போய் அந்த லேண்ட் மேட்டரை பேசிட்டு வர்றேன் அப்டேட்டைப் படிங்க.

**ச ப் பா ணி**

கையேந்தினால் தன்னையே கொடுக்கிறது குழந்தை

**கோழியின் கிறுக்கல்!!**

வயிறு முட்ட மதிய உணவு உண்டபின் வண்டி ஓட்டுவது, கும்பீபாகத்திற்கு இணையான தண்டனை!!!

**எனக்கொரு டவுட்டு**

ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் ;ஸ்டாலினிடம் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! -தம்பிதுரை# போன வாரமெல்லாம் நல்லாதானே இருந்தாரு..!!

**உள்ளூராட்டக்காரன்**

ஆண் பிள்ளை செய்யும் தப்புக்கு அம்மா அப்பாவிடமும், பெண் பிள்ளை செய்யும் தப்புக்கு அப்பா அம்மாவிடமும் திட்டு வாங்குகிறார்கள்

**amudu**

குழந்தைகளிடம் இருக்கும் நல்ல பழக்கத்திற்கு காரணம் தான் என்பதும், கெட்ட பழக்கத்திற்கு காரணம் கணவர் என்பதும், மனைவிகளின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.

**ரஹீம் கஸ்ஸாலி**

எந்த நடிகராவது ரசிகர்களுடன் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்தால்கூட அந்த நடிகரோடு ஒப்பிடப்பட்டு சிவக்குமார்தான் திட்டு வாங்கிறார்.

**mohanram.ko**

‘ஆ, ஊ’ ன்னா பள்ளிக்கூடத்தில சேர்த்திடுறாங்க, 3 வயசு முடியறதுக்குள்ள உயிர் எழுத்து கத்துக்கொடுக்க…

**மித்ரன்**

முதல் பயணத்திலேயே பழுதான அதிநவீன வசதி கொண்ட வந்தேபாரத் ரயில் பயணிகள் அதிர்ச்சி! – செய்தி

மோடிஜி கா டீஜிட்டல் இந்தியா மே இதெல்லாம் சர்வ சாதாரணம் ஹே..?!

**Vaishali S**

என்னவனை நான் பார்க்கயில் வானவிலின் வண்ணங்களும் தோற்றே போகும்… என் இதயத்தில் தோன்றும் வண்ணங்கள் முன்பு…

**உள்ளூராட்டக்காரன்**

வைராக்கியங்களை உடைக்க வல்லது மசால் வடை..!

**????தேடல் ????**

துரோகங்களை புன்னகையுடனும் மன தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள் காரணம் வேறு எந்த வழியிலும் அதனை வெல்ல முடியாது.

**பழைய இரும்பு கடை**

தலைவரே @rajinikanth போர் வரும் போது வரவேன்னு சொன்னீங்க

இதுக்கு மேலையுமா வாங்க போரூக்கு போவோம்.

**கௌரிசங்கர்**

இரவில் விளக்கை ஏற்றுவது

இருட்டுக்கு நாம் செய்யும்

வன்முறை தானே?

**ElavarasanThangasamy**

எடப்பாடி தலைமையில் 100 நாள் கூட ஆட்சி நிலைக்காதுனு சொன்ன அரசியல் ஜாம்பவான்களின் கருத்தை பொய்யாக்கி இரண்டு வருடம் ஆட்சியில் நிலைத்து இருப்பதே பெரிய சாதனை தான்.

**அரூர். பொன்.திருஞானமூர்த்தி**

வாங்கியதை திருப்பி கொடுக்காதவன்

வாழ்க்கையில் முன்னேறியதாக சரித்திரம் இல்லை

எதையென கேட்காதீங்க எதையுமே !!

**டீகடை பெஞ்ச் வழி காட்டி**

பறவையை பார்த்தான் விமானம்

படைத்தான் பாவாடையை பார்த்தான் நைட்டி யை தைத்தான்..!

**கோழியின் கிறுக்கல்!!**

உலகின் மிக மோசமான போதைப் பொருட்கள் மது, புகையிலை, போன்றவை வெஜிடேரியன் என்பது குறிப்பிடத்தக்கது!!

**aʍʄ_ʄaʐɨʟ**

நாடு இப்போது கோபமாக உள்ளது – மோடி.

நாடு ரொம்ப வருஷமா கோமா’ள இருக்கு ஜி.

**intro_vertism**

கதைய சொல்லி கேக்குறதுனா, தென்கச்சி கோ சாமிநாதன் சொல்றத தான் கேட்கனும்.., “இப்டி தான் ஒருத்தன் ” னு ஆரம்பிச்சார்னா…மனுசன் அவளோ சுவாரஸ்யமா அத்தனை எக்ஸ்பிரசனோட சொல்லுவாரு

**அமுது**

“வீட்டில் உள்ள இனிப்புகளை பூனையும், எலியும் சாப்பிட்டு விடுகிறது” என்பது, சுகர் பேஷண்ட்களால் பரப்பி விடப்பட்ட புரளியாகத் தான் இருக்கும்.

-லாக் ஆஃப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share