“யாரோ ஒருத்தர் நல்லது செஞ்சா அவங்களை பாராட்டுங்க இந்த பக்கம் வந்து ஏன்ப்பா முறைக்குறீங்க”ன்னு எடப்பாடி பழனிசாமியும், மோடியும் ஒரே மைண்ட் வாய்ஸ்ல பேசுறாங்க. ஒக்கி புயல் வந்தப்ப நம்மாளு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடிக்கிட்டு இருந்தாரு. அங்க வெள்ளத்துல பினராயி விஜயன் தீயா வேலை பார்த்துகிட்டு இருக்காரு. சேட்டை பண்ணுற பசங்களை நல்லா படிக்குற பசங்களோட கம்பேர் பண்ணி திட்டுவாங்களே அது மாதிரி இவரை அவரோட கம்பேர் பண்ணி கலாய்ச்சுகிட்டு இருக்காங்க. சென்ட்ரல்லையும் அதே நிலைமை தான். இதுக்கும் வெள்ளம் தான் காரணம். வெள்ளத்துக்கு டில்லியில 500 கோடி ரூபாயை அழுது அழுது கொடுத்துருக்காங்க. ஒரே அடியா 700 கோடி யூஏஇ நாடு அறிவிக்க மோடி என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்காராம். நமக்கு எதுக்கு வம்பு அப்டேட்டை பாருங்க..
**@sultan_Twitz**
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை – செய்தி
தமிழிசை & எச்.ராஜா : இன்பமாய் இருக்குதைய்யா!
**@BlackLightOfl**
வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி – செய்தி
அண்ணே.. அப்படியே டிசம்பர் மாசம் தமிழ்நாட்டு பக்கம் வந்துட்டு போறது
**@ajmalnks**
அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் தண்ணீரை கடலுக்கு செல்லவிடாமல் பணிகளை மேற்கொண்டு வருகிறது -அமைச்சர் ஜெயக்குமார்
டேக் டைவர்சன் போர்டு வச்சு திரும்பவும் கர்நாடகாவுக்கு திருப்பி விடுவாங்க போல.
**@imparattai**
மன்னன்: என்ன அமைச்சரே எனக்குள் திடீரென இவ்வளவு வீரம் எங்கிருந்து வந்தது?
அமைச்சர்:மன்னா அது நம் முன்னால் மன்னரது ஆவி தங்கள் உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மாற்றம்!
மன்னன்:அப்படியா க க க போ!
**@கருப்பு கருணா**
கவிதையை படிப்பதோடு
ஹெச் ராஜா நிறுத்திக்கொள்ளவேண்டும் என கவியுலகம் சார்பில் கேட்டுக்குறோம்பா!
உணர்ச்சிவசப்பட்டு அவரே எழுதிடப்போறாரு..அப்புறம் கவிஞர் ராஜான்னு வேற கூப்பிட்டு தொலைக்கணும்!
**@வாசுகி பாஸ்கர்**
கோமாளித்தனத்தின் மூலம் கவனம் பெறலாம் என்று யாரேனும் நினைத்தால், அந்த கோமாளித்தனத்தை கண்டும் காணாமல் விடுவதே சிறப்பு.
**@ArunkumarTNR**
அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் தண்ணீரை கடலுக்கு செல்லவிடாமல் பணிகளை மேற்கொண்டு வருகிறது -அமைச்சர் ஜெயக்குமார்
– ஆமாம், ஆற்று கரைகளை உடைத்து ஊருக்குள் திருப்பி விட்டுவிடுவோம்.
**@Thaadikkaran**
பத்து நிமிஷம் பாஸ்டா வெச்சு தூங்குனாதான் சீக்கிரம் எந்திருப்போம்னு அலாரம் வச்சுகிட்டு, அலாரம் அடிச்சதும் இன்னும் பத்து நிமிஷம் இருக்குன்னு மீண்டும் தூங்குற தூக்கம் இருக்கே டிவைன்..!!
**@mohanramko**
மண்ணில் மட்டும், போட்டது போட்ட படி இருப்பதில்லை…..
வளர்ந்துவிடுகின்றன விதைகள்
**@mohanramko**
அவசரமா வேலைக்கு கிளம்பும்போது, ‘ப்ராக்ரஸ் ரிப்போர்ட்’ட காட்டி கையெழுத்து வாங்குவதெல்லாம் குழந்தைகளின் சாணக்கியத்தனம்…..
**@manipmp**
கல்யாணத்திற்கு முன் பணமும்
கல்யாணத்திற்கு பின் நேரமும்
அதிகம் செலவிடனும் ஆண்கள்!
**@Thaadikkaran**
அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் தண்ணீரை கடலுக்கு செல்லவிடாமல் பணிகளை மேற்கொண்டு வருகிறது -அமைச்சர் ஜெயக்குமார்
– இன்னொரு தெர்மோகோல் திட்டம் வரபோகுதோ
**@Chivni Prakash**
ஆயிரம் குறைகூறிவிட்டு படத்தை ஒரு தரம் பார்க்கலாம் என்று சொல்பவர்கள், அவர்கள் பார்த்துவிட்டார்கள் என்பதாலேயே நம் தலையை தண்டவாளத்தில் வைக்கப்பார்க்கிறார்கள் என்று அறிக.
**@teakkadai**
தன் கேரியரில் அடுத்த கட்ட நிலைக்குப் போக முடியவில்லை என்று உணருபவர்கள் பழைய பெருமையை பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
**@கருப்பு கருணா**
தேவி
பாவி
காவி
இது ஒரு ஹைக்கூ கவிதை…
**@ajmalnks**
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணையில் தெளிவில்லாததால் அரசாணை ரத்து-தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
இதெல்லாம் நடக்காவிட்டால்தான் அதிசயம்.
**@manipmp**
ஒரு தூண்டிலில் மீன் பிடிப்பது போல் துயரமானது..
ஒரு குழந்தையை தூங்கவைப்பது
**@Fazil_Amf**
இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மம்தா பானர்ஜி.. முதல்வர் பழனிசாமிக்கு யாரும் வாக்கு அளிக்க வில்லை ?.. இந்தியா டுடே சர்வே செய்தி.
இது என்னடா அடைமொழி நாயகன், எடப்பாடி சாமிக்கு வந்த சோதனை!
-லாக் ஆஃப்
�,”