யாகம் வளர்த்தால் மழை பெய்யுமா? சத்குரு ஜகி வாசுதேவ்

public

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் நதிநீர் இணைப்பு, தண்ணீர் பிரச்சினை, சுற்றுச்சூழல், அரசியல், ஆன்மிகம் என உள்பட பல்வேறு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாகப் பதிலளித்தார்.

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் இந்த சூழலில், மழை வர வேண்டி யாகம் அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் யாகம் நடத்தியது விமர்சனத்தை உண்டாக்கியது. யாகம் செய்தால் மழைவரும் என்பது ஏமாற்றுத்தனம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிமுகவினரை சாடியிருந்தார். இந்த நிலையில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே இது தொடர்பான கேள்விகளை சத்குரு ஜகி வாசுதேவிடம் முன்வைத்தார்.

அதனைக் கேள்வி-பதில் வடிவத்தில் பின்வருமாறு காண்போம்…

ரங்கராஜ் பாண்டே: மரம் வளர்ப்பது மழைபெய்ய வேண்டும் என்பதற்காக? ஆனால் யாகம் செய்தால் மழை வரும் என்று சிலர் கோயில்களில் யாகம் செய்கிறார்கள். அதனை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். யாகம் என்பது மழையைக் கொண்டுவருமா?

**சத்குரு: (சிரித்துக்கொண்டே) நீங்கள் இதனை அவர்களிடத்தில்தான் கேட்க வேண்டும். எங்கே மழை இல்லையோ அங்கே சென்று யாகம் செய்யலாமே. ஒரு வருடத்திற்கு முன்பு, நிலநடுக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆந்திராவில் பெரிய யாகம் ஒன்று நடைபெற்றதாகவும் அதில் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொண்டதாகவும் என்னிடம் ஒருவர் சொன்னார். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘வெள்ளியங்கிரி மலை எரிமலையாகாமல் இருக்க நானும் ஒரு யாகம் செய்கிறேன், அது கண்டிப்பாக சாத்தியமாகும்’ என்றேன். ஆந்திராவில் யாகம் செய்யாமல் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் குஜராத்தில் சென்று அவர்கள் யாகம் நடத்தி பூகம்பத்தை தடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்**

பாண்டே: யாகம் மூலமாக மழை பெய்யாது என சத்குரு சொல்கிறார். அப்படித்தானே?

**சத்குரு: நீங்கள் பத்திரிகையாளர்தானே, இதுகுறித்து ஆய்வுசெய்து நீங்களே சொல்லுங்கள்**

பாண்டே: வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் சக்தி உள்ளதெனவும், அதன் மூலம் நிறைய சாதிக்க முடியும் எனவும் இந்த மண் நம்புகிறதே?

**சத்குரு: மந்திரத்துக்கு சக்தி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அதனை எதற்கு உபயோகப்படுத்த வேண்டும், எதற்கு உபயோகப்படுத்தக் கூடாது என்ற தெளிவு வேண்டுமல்லவா நமக்கு?**

பாண்டே: வருண பூஜை என்பது இதுவரை இருந்துவந்ததுதானா அல்லது திடீரெனக் கண்டுபிடிக்கப்பட்டதா?

**சத்குரு: முன்பு சுற்றுச்சூழலுக்கான பணிகளை செய்துவிட்டு வருண பூஜையில் ஈடுபட்டார்கள். ஆனால், ஒன்றுமே செய்யாமல் பூஜையில் ஈடுபட்டால் மழை வந்துவிடுமா? அடுப்பையே பற்ற வைக்காமல் கைகும்பிட்டுக்கொண்டு இருந்தால் சமையல் ஆகிவிடுமா? அந்த கதைதான்**

பாண்டே: மந்திரம், யாகம், ஹோமம் ஆகியவை கதைக்கு ஆகாது என்று புரிந்துகொள்ளலாமா?

**சத்குரு: அனைத்திற்கும் ஒரு சக்தி இருக்கிறது. ஆனால் அதனை எதற்கு உபயோகப்படுத்த வேண்டும் தெளிவு இருக்க வேண்டும்தானே?**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணி](https://minnambalam.com/k/2019/06/24/71)**

**[தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/24/44)**

**[பேசியது பேசியதுதான், கருத்தை மாற்றமாட்டேன்: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/06/23/134)**

**[பிக் பாஸ் 3: ஷெரின் ஆர்மி ரெடி!](https://minnambalam.com/k/2019/06/24/23)**

**[அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்](https://minnambalam.com/k/2019/06/23/136)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *