இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி, தன் நாட்டின் வான்வெளி வழியாகப் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டம் ஜூன் 13,14 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
**பிப்ரவரி 26 பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது வான் வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. இதில் இந்திய பயணிகள் விமானங்களும் அடங்கும். இப்போது மோடி கிர்கிஸ்தான் செல்வதற்கு பாகிஸ்தான் வான் வழியாக சென்றால் பயணம் நான்கு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் பாகிஸ்தான் தனது வான்வழியில் இந்தியா பறப்பதற்குத் தடை விதித்திருப்பதால் பிரதமரின் பயண நேரம் எட்டு மணிநேரமாக அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்தது.**
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் பாகிஸ்தான் வான் வழியாக இந்தியப் பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பயணித்து கிர்கிஸ்தானை அடைய அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வழியாகப் பயணிக்க அனுமதித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
**“நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசின் வேண்டுகோளைக் கொள்கை அளவில் ஏற்று இந்திய பிரதமர் மோடி எங்கள் வான் வழியாக பறக்க அனுமதி கொடுத்திருக்கிறார். நடைமுறை விஷயங்களை முடித்த பின் இதை முறைப்படி இந்திய அரசிடம் தெரிவிக்க இருக்கிறோம்” என்ற பிடிஐயிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.**
ஷாங்காய் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொள்கிறார். இதுவரை அங்கே இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களின் சந்திப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் பாகிஸ்தானின் இந்த வான் அனுமதி முன்னெடுப்பு குறிப்பிடத் தக்கதாக அமைந்திருக்கிறது.
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”