மோசடி விளம்பரங்களைத் தடுக்கும் முயற்சியில் கூகுள்!

Published On:

| By Balaji

கூகுள் நிறுவனத்தின் கொள்கை விதிகளை மீறும் வகையில் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான தேவையற்ற மோசடி விளம்பரங்களை அழித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகையில் வெளியான தகவலின்படி, ஸ்கேமர் எனப்படும் மோசடியாளர்கள் கூகுள் நிறுவனத்தின் search ad தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தது. மேலும் அவர்கள், அதில் ஆப்பிள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவங்களின் பொருட்களைப் போலவே போலியான ஒன்றைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற போலி விளம்பரங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக கூகுள் நிறுவனம் இதற்குப் பதிலளித்துள்ளது. இதுகுறித்து பேசிய கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய தயாரிப்புக் கொள்கை இயக்குநரான டேவிட் கிராஃப், “கூகுள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில், ஒரு விநாடிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலி விளம்பரங்கள் எனக் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3.2 பில்லியன் போலி விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த கட்டமாக உலகம் முழுவதிலும் மோசடி விளம்பரங்களைப் பரப்பும் third-party நபர்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் இதுகுறித்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share