கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருமுயற்சியாக விதானசவுதா எதிரே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘அம்பேத்கர் ரயில் நிலையம்’ என பெயர் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுத திட்டமிடப்பட்டுள்ளது’ என்று கூறினார். தொடர்ந்து, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘விதானசவுதா எதிரே பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. விதானசவுதாவுக்கு அம்பேத்கரின் பெயரை வைப்பதுடன், அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸையும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறினார்.�,
‘மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர்’ – சித்தராமையா
+1
+1
+1
+1
+1
+1
+1