மெட்ரோ இயக்குநரும் விஜய் ஆண்டனியும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு வெளியான படம் மெட்ரோ. செயின் பறிப்பை மையமாகக்கொண்டு உருவான அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அனந்த கிருஷ்ணன் இயக்கினார். அதில் சிரீஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படமான மெட்ரோவைத் தொடர்ந்து அனந்த கிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் முன்பே வெளியான நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் முற்றிலும் அரசியல் படமாக உருவாகிறது . எமன் திரைப்படத்துக்குப் பின் விஜய் ஆண்டனி நடிக்கும் அரசியல் படம் இது. டி.டி.ராஜாவின் செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘உரு’ பட இசையமைப்பாளர் ஜோஹன் இசையமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படம் குறித்த அடுத்தகட்ட தகவல்கள் பின்வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்குப் பின் விஜய் ஆண்டனி, அருண் விஜய்யுடன் இணைந்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதை மூடர் கூடம் நவீன் இயக்குகிறார். மேலும், காவல் துறை அதிகாரியாக காக்கி டா என்ற படத்திலும் சத்யராஜ், ஜெய் ஆகியோருடனும் நடிக்கவுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**
�,”