எதிர்க்கட்சிகள் மீது மூன்றாம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை வாக்காளர்கள் நடத்துவார்கள் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 10) மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்த விமானப் படைத் தாக்குதல் போன்றவை, நாட்டின் பாதுகாப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள அர்ப்பணிப்பை காட்டுகிறது. இந்த நாடு பாதுகாப்பான கைகளில் இருக்கிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் வைத்துள்ள நம்பிக்கை மீதும், அவர்களின் அபிலாஷைகள் மீதும் மூன்றாம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை வாக்காளர்கள் நடத்துவார்கள்.
இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு யாரேனும் ஆதாரங்களைக் கேட்டால், நமது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை கொல்வதற்காக பாகிஸ்தானுக்கு சென்றார்களா அல்லது அங்கிருந்து அவர்களது பிணங்களை எடுத்துவருவதற்காக சென்றார்களா என பதில் கேள்வி கேளுங்கள். இந்திய ராணுவத்தின் சாதனைகள் குறித்து கேள்வியெழுப்பி, அதற்கான ஆதாரங்களை கேட்பவர்கள் உங்களது வாக்குகளை பெற தகுதியானவர்களா? இந்திய பாதுகாப்பு படைகளின் மன உறுதியை குறைப்பதில் எதிர்க்கட்சிகள் அதிக விருப்பம் காட்டுகின்றன” என்று தெரிவித்தார்.�,