முத்தலாக் முறைக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து!

public

இன்றைய நவீன உலகில், சமூக வலைதளங்களில்கூட மூன்று முறை தலாக் என்று கூறி தங்களுடைய மனைவியைப் பிரிகின்றனர்.

எனவே, முத்தலாக் முறைக்கு எதிராக பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் எதிர்ப்புத் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, முத்தலாக் முறையை தடை செய்யக் கோரி சுமார் 1 லட்சம் முஸ்லீம் ஆண்களும் பெண்களும் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

குரான் படி, ஒரு ஆண் முதன்முறை தலாக் கூறியபின் மூன்று மாதங்களுக்கு அந்த முடிவை கருத்தில்கொள்ள வேண்டும். அதன்பின்னர், இரு முறை தலாக் கூறியபின்னர்தான் விவாகரத்து பெற முடியும். இஸ்லாமிய அமைப்பான முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் (MRM) ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS) உடன் இணைந்து இது தொடர்பான மனுவில் கையெழுத்துப் பெற தொடங்கியுள்ளது.

பல பெண்கள் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது அரசியலமைப்புக்கு விரோதமானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் தலாக் முறை அரசியலமைப்புக்கு விரோதமானது. அது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், ‘முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது. முத்தலாக், பலதார மணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ போன்றவை இஸ்லாமியம் நடைமுறைகளுடன் ஒருங்கிணைந்தது இல்லை எனத் தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து, நாடு முழுவதும் ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் தனிச் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க மாட்டோம் என எதிர்ப்புத் தெரிவித்தது. அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், ‘பொது சிவில் சட்டம் கொண்டுவர முனையும் மத்திய அரசின் முடிவு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது’ என எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது மனைவியை கொல்வதைவிடச் சிறந்தது என, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0