முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக முன்னர் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 346 மருத்துவனைகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் பல மருத்துவனைகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகப் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வருவோரிடம் சில தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து முன்னர் வழக்கு தொடர்ந்த போது குழுக்கள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை குழுக்கள் அமைக்கப்படவில்லை. அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் இதனைக் கண்காணிக்க அரசு சார்பில் தனியாகக் குழுக்கள் அமைக்கப்படவில்லை என்றும் ரமேஷ் மனுவில் குறிப்பிட்டிருந்தார்..
இந்த மனு இன்று(21.6.2017) நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
2012 முதல் 2016 வரை சேவை குறைபாடு, கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்படி 346 தனியார் மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட 16 மருத்துவமனைகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 117 மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக் கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் தவறிழைத்த தனியபார் மருத்துவமனைகள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த கேள்வியை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தின் போது முன்வைத்தார். அதிகாரப்பூர்வமாகத் தனியார் மருத்துவமனைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் கண்காணிப்பு குழுக்கள் பெயர் அளவிலே உள்ளதாகவும், தனி அலுவலகம் கொண்டு அவை செயல்படவில்லை என்று மனுதாரர் வழக்கறிஞர்கள். இரு தரப்பும் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவும் போது பல தனியார் மருத்துவனைகளும், அரசு மருத்துவர்களும் சிக்குவார்கள் என்பது தெரிவருகிறது.�,