முதல்வரும் துணை முதல்வரும் டியூஷன் ஃபீஸ் கொடுக்க வேண்டும்!

public

ஈரோட்டிலே நடந்த திமுக மண்டல மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று (மார்ச் 25) ‘கலைஞரின் பேச்சில் எழுத்தில் சமுதாயப் புரட்சி’ என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி பேசினார். அப்போது, “முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ஸ்டாலினுக்கு டியூஷன் ஃபீஸ் கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், “சமீபத்திலே திமுக செயல் தலைவர் பத்து மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அது மிக முக்கியமான கடிதம். நாமெல்லாம் தலையிலே தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய கடிதம் அது. ஏனென்றால் 15ஆவது நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. அதில் பல மாறுதல்களைக் கொண்டு வருகிறார்கள்.

அதில் முக்கியமானது என்னவென்றால் மக்கள்தொகை குறைவாக இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி குறைந்துவிடும். அதாவது மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்து ஒரு மாநிலம் வெற்றி பெற்றால் அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும்.

இன்னொன்று அந்த மக்களுக்காகப் பாடுபட்டு தொழிற்சாலைகளை அதிகரித்து, வேலைவாய்ப்பை அதிகரித்து, தனிநபர் வருமானத்தை உயர்த்தி வைத்திருந்தால் அந்த மாநிலங்களுக்கும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவிடும். இது எப்படி இருக்கிறது என்றால், குதிரை கீழேயும் தள்ளி குழியும் பறிக்கும் என்பதைப்போல மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று பேசிய கனிமொழி, தொடர்ந்தார்…

“ஒரு பிள்ளை நன்றாகப் படித்தால் நாம் என்ன செய்வோம், பரிசு கொடுப்போம். ஆனால், மத்திய அரசோ நன்றாகச் செயல்பட்டு முன்னேறும் மாநிலங்களுக்குப் பரிசு தராமல் ஃபனிஷ்மெண்ட் தருகிறது. அதாவது பரிசுத் தொகையில் குறைக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? நீ அரிசி கொண்டுவா, நான் உமி கொண்டு வருகிறேன் இருவரும் ஊதி ஊதித் தின்னலாம் என்ற நிலை இது.

இதை எதிர்த்துக் கேட்க அதிமுக அரசுக்குத் தெரியவில்லை. அவர்கள் பாவம், இதை எதிர்க்க முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியாது. இந்த அரசாங்கத்தைக்கூட வழிநடத்தக்கூடிய பொறுப்பும் இன்று தளபதி அவர்களின் தலையிலேயேதான் விழுந்திருக்கிறது. அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு மற்ற மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசை நோக்கிக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் இந்தத் தமிழகத்தை, இந்தியாவையே வழி நடத்தக்கூடிய ஒரு மாநிலமாக மாற்றியிருக்கிறார். அந்தப் பெருமை வேறு யாருக்கும் இல்லை. இந்த உரிமையைக் காக்க வேண்டும் என்றுகூடப் பலருக்கும் தெரியவில்லை.

அதன் பிறகுதான் சட்டமன்றத்தில் முதல்வர் சொல்கிறார், துணை முதல்வர் சொல்கிறார், நாங்களும் இதுபற்றிக் கடிதம் எழுதுகிறோம் என்று. நியாயமாகப் பார்த்தால் முதல்வரிடம் இருந்தும், துணை முதல்வரிடம் இருந்தும் ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார் கனிமொழி.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *