முதல்வரின் சமரசத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்: வைகோ

Published On:

| By Balaji

சேலத்தில் நேற்று ஈரடுக்கு பாலத்தை திறந்துவைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைப் பறித்து திட்டத்தை திணித்து நிறைவேற்றும் நோக்கம் இல்லை. எட்டுவழிச் சாலை தொடர்பாக நில உரிமையாளர்களிடம் சமாதானம் பேசி, அவர்களின் சம்மதத்துடன் திட்டம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “எட்டு வழிச்சாலை திட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக தனது கொள்கையை விட்டுத்தந்து சமரசம் செய்து கொள்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தமிழக முதல்வரின் சமரசத்தை ஏற்கமாட்டார்கள்” என்றார்.

காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு அறிவிப்பு என்று விமர்சித்த வைகோ, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அழிந்துவிடும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 596 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் ஜூன் 12ம்தேதி நடைபெறுகிறது. இதில் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கின்றன. மதிமுக சார்பில் நானும் பங்கேற்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share