இந்திய அரசியலைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த சிந்தனை சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஐ.நா.சபை தீர்மானித்துள்ளது.
இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அமைப்பு, கல்பனா சரோஜ் அமைப்பு மற்றும் மனிதவள அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து வருகிற 13-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.�,