?முடிவை மாற்றிய பிசிசிஐ!

Published On:

| By Balaji

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆடவுள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வில் பிசிசிஐ புதிய முடிவை எடுத்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி டையில் முடிந்தது. இந்நிலையில் கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அக்டோபர் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் இரு போட்டிகளுக்கான அணியில் இருந்த மொஹமது ஷமி மட்டும் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். எதிர்பார்க்கப்பட்ட கேதர் ஜாதவ் அணியில் இடம்பெறவில்லை.

இந்த அறிவிப்பையடுத்து கருத்துக் கூறிய கேதர் ஜாதவ், “எல்லா விதத் தகுதிச் சோதனையையும் மேற்கொண்ட பின்னர்தான் தேவதாரு கோப்பைப் போட்டியில் தற்போது விளையாடிவருகிறேன். ஆனால், இந்திய அணியில் நான் ஏன் இடம்பெறவில்லை எனத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அணித் தேர்வு குறித்த எந்த விதமான உரையாடலும் யாரும் என்னுடன் நடத்தவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் சில சலசலப்புகள் எழுந்தன. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கவுள்ள 4 மற்றும் 5ஆவது ஒருநாள் போட்டிக்கு கேதர் ஜாதவ் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் சேர்க்கப்படாத ஜாதவ் தற்போது திடீரென சேர்க்கப்பட்டுள்ளதால் பிசிசிஐ வட்டாரத்தில் மேலும் சலசலப்புகள் உருவாகியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்திய டி-20 அணியில் எம்.எஸ். தோனி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel