இந்தியாவைத் தனது முக்கிய இலக்காகக்கொண்டு செயல்பட உள்ளதாக டாட்டா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 29ஆம் தேதி வெளியிடப்பட்ட 110ஆம் ஆண்டின் அறிக்கையில், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருப்பதாவது, “நடப்பு நிதியாண்டில் எஃகு உற்பத்தித்துறை நன்றாகச் செயல்பட்டாலும்கூட, சர்வதேச அளவில் எஃகு உற்பத்தித்துறை நிறைய சவால்களைச் சந்தித்துள்ளது. உலக எஃகு சங்கத்தின் தகவலின்படி, அடுத்த வருடத்தில் சர்வதேச அளவிலான எஃகு உற்பத்தியில் சரிவு ஏற்படும் என்றும், இது 2035ஆம் ஆண்டு வரையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல நாடுகள் தங்களின் எஃகு உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன. எஃகுவின் தேவையும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், எஃகுவின் தேவை அதிகரிக்கும். இந்தியாவில் எஃகு உற்பத்தித்துறை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீண்டு வர அரசு தரப்பில் ‘தேசிய எஃகு கொள்கை 2017’ சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்தையை முக்கிய இலக்காகக் கொண்டு டாட்டா நிறுவனம் செயல்படும். மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் நுகர்வோருக்கு டாட்டா நிறுவனம் வழங்கவிருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,