எலெக்ஷனுக்கு முன்னால உடன்பிறப்புகளும், தோழர்களும் சேர்ந்து நின்னு பிஜேபிக்கு எதிரா களமாடிகிட்டு இருந்தாங்க. இப்ப என்னடான்னா அவங்களுக்குள்ளேயே ஒருத்தரை எதிர்த்து ஒருத்தர் டிவிட் போடுறதும், கமெண்ட் பண்றதுமா கலவரம் பண்ணிகிட்டு இருக்காங்க. 10% இட ஒதுக்கீட்டை ஏன் ஆதரிச்சீங்கன்னு மார்க்ஸிஸ்டை பார்த்து கேள்வி கேட்ட உடன்பிறப்புகள், என்ஐஏக்கு ஆதரவு கொடுத்ததும் இவங்களைப் பார்த்து அவங்க ஏற ஆரம்பிச்சுட்டாங்க. இதை பார்த்து எச்.ராஜா வகையறாக்கள் எப்படி சிரிப்பாங்கன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.
ஆமா என்ஐஏல இந்த மீம்ஸ் போடுறது, டிவிட் போடுறதுலாம் வருமா.. சும்மா சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்கேன். மத்தபடி இந்த குமாருக்கு பயம்லாம் இல்ல.. அப்டேட்டை பாத்துட்டு மறக்காம சொல்லிட்டு போங்க…
**எனக்கொரு டவுட்டு **
ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்!”- முதல்வர் பழனிசாமி
# பள்ளிக்கூடம் லீவு விடுவீங்களா – LKG ரவுடி பாய்ஸ்..!
**ரஹீம் கஸ்ஸாலி**
தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான கள்ளக்குறிச்சி பிரபு சந்திப்பு
தினகரனிடம் இருந்த ஒரு ஆளும் போயாச்சா?
**சித்ரா தேவி**
டிவி ஆப் செய்யப்பட்ட வீடு ஏதோ பயம் தருகிறது.
**ச ப் பா ணி**
உலகத்தில் காசு இல்லாமல் கிடைப்பது அட்வைஸ்க்கு அப்புறம் அடுத்தவங்க போன் நெம்பர்தான்
#என் நெம்பர நோட் பண்ணிக்கிங்க
**எனக்கொரு டவுட்டு**
தட்டி கொடுத்தா வேலை செய்யும் என்பது வாட்ச்,ரிமோட்டுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்..!
**செந்திலின்_கிறுக்கல்கள்**
நீட் வந்த பிறகு அகரம் மூலமாக ஒரு அரசுப் பள்ளி மாணவரைக் கூட மருத்துவராக்க முடியவில்லை: சூர்யா வேதனை# இங்க அரச காப்பாற்றிக்க தான் கவலை அரசுப்பள்ளிய பற்றிலாம் யோசிக்க டைம் இல்ல!
**மித்ரன்**
நண்பர்கள் டூர் கேன்சல் ஆகறதுல ரெண்டே காரணம்..
1.அவன் வந்தா நான் வரல…
2.அவன் வரலைன்னா நானும் வரல
**ஊர்க்காவலன்**
கடவுள் படத்துலேயே “ஸ்லோமோசன்”ல தான் நல்லத காப்பாத்த வாராரு… அப்ப வாழ்க்கையில நம்மள காப்பாத்த எப்படி வருவாரு….
**சாணக்கியன்**
சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும்?
மக்களிடம் கருத்து கேட்கும் மோடி.
//சுதந்திரத்திற்காக போராடிய எதாவது ஒரு RSS தலைவரை பற்றி பேசினால் நன்றாக இருக்கும்…
**மித்ரன்**
காதல்-ங்கிறது தும்மல் மாதிரி…. தானா வரணும்..
மூக்குபொடி போட்டு வந்துச்சுன்னா, அப்புறம் எப்பவுமே மூக்குக்கு பொடி போட்டுகிட்டே இருக்கணும்…
எதையாச்சும் சொல்லுவோம்….
**amudu**
கலர் கலராய் மிட்டாய் சாப்பிடுவதில் தொடங்கி, கலர் கலராய் மாத்திரை சாப்பிடுவதில் முடிவது மனித வாழ்க்கை.
**மித்ரன்**
உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி! – செய்தி #
விரும்பிய மக்களுக்கு தெரியாமல் விரும்பப்படும் ஓரே தலைவர்…
**ஜோக்கர்…**
“நீயின்றி நானில்லை” என்று சொன்னவள்தான்,
நீ இன்னுமா கல்யாணம் முடிக்கல?! எனக்கு “மூத்தது பொண்ணு, இளையது பையன்” என்று அறிமுகப்படுத்தியவாறு கடந்து செல்கிறாள் இன்று !!!
**ரமேஷ்.ஏ**
அங்க பப்பரப்பே’னு காத்து வாங்கிட்டு இருக்கிற ரோட்லயெல்லாம் மாட்டுவண்டி ஓட்ற மாதிரி ஓட்டிட்டு வாங்க….பஸ் ஸ்டாண்ட்குள்ள போகும் போது மட்டும் சர்ர்ர்ரு….புர்ர்ர்’ருனு ஓட்டி சீன் போடுங்க.
# அரசு பேருந்துகள்.
**சித்ரா தேவி**
இதே ராமதாஸ் பாஜகல இருந்திருந்தா அத்திவரதர பார்க்க வர்றவங்கள்ல பாதிப் பேர் எங்களுக்கு ஓட்டுப் போட்டிருந்தாக் கூட என் மகன் பிரதமர் ஆகியிருப்பான்னு சொல்லிருப்பார்ல…
**உள்ளூராட்டக்காரன்**
இனிமேல் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு, அடுத்த முறை அத்தி வரதர் குளத்திலிருந்து வெளியே வரும்முன் கல்யாணம் பண்ணிடனும் என்பதே லட்சியமாக இருக்கும்
**ரஹீம் கஸ்ஸாலி**
8 வழிச்சாலை, ‘அதிவேக சாலை’ என மாற்றப்பட்டுள்ளது!- எடப்பாடி
விஷம் எந்த பெயரில் வந்தாலும் விஷம்தான்.
**செந்திலின்_கிறுக்கல்கள்**
கடவுளை நாட கடவுளே கொடுக்கும் வாய்ப்பின் பெயர் தான்..!
“பிரச்சனை”
**amudu**
குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதை விட பெரிய கஷ்டம், அவங்க புராஜெக்டை நாம் செய்வது தான்.
**ச. மாடசாமி**
ஒரு பூனை கதை..!
வயதான பூனை அது . எலியை பிடிக்க முடியவில்லை.
அசையாமல் செத்தது போல் கிடந்தது. உண்மையில் பூனை செத்துவிட்டதாக எலிகள் கருதின. பூனையின் பக்கத்தில் வந்து விளையாடின. அப்போதும் பூனை அசையவில்லை.
ஓர் எலி உற்சாக மிகுதியால் பூனையின் தலையில் ஏறி விளையாடியது. உடனே பூனை சட்டென்று அந்த எலியை பிடித்தது. எலிகள் ஓட்டம் பிடித்து விட்டன. எலிகள் உலகில் மாறாத பாடம் … “பூனையை நம்பாதே”
மதவாத ஆட்சியாளர்களின் கல்விக் கொள்கையை நம்புவது நடிக்கும் பூனையை நம்புவது போலதான்.
-லாக் ஆஃப்
**
மேலும் படிக்க
**
**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”