தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மீனவர்களைத் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் எனவும் மண்டல கமிஷன் 1980 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது.
மண்டல கமிஷன் பரிந்துரை படி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என அரசிடம் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக மீனவ பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், “தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவக் கிராமங்களில் 9.24 லட்சம் பேர் வசிக்கின்றனர். கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி மீனவ கிராமங்களுக்கு சென்றடையவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணைய வார்டு மறு வரையறை குழுவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்
�,