மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்: இலங்கை கடற்படை!

public

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும், ரோந்து கப்பலைக் கொண்டு மோதியதால் ராமேஸ்வரம் மீனவர்களின் படகு சேதமடைந்துள்ளது. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர். இலங்கை கடற்படையினர் தங்களை 5 மணிநேரத்திற்கும் மேல் கைகளை கட்டிப்போட்டு இரும்புக்கம்பியால் தாக்கியதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பதற வைத்த சம்பவம்

இது போல் மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன்னர், ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 6.3.2017 அன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் அன்று இரவு, தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில் கன்போட் கப்பல் மற்றும் வாட்டர் ஸ்கூட்டரில், அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், முன்னறிவிப்பின்றி திடீரென மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது, மீனவர் டிட்டோ என்பவரின் படகில் சென்ற தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோவின் (21) கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

படகு ஓட்டுனர் சரோன் (22) இடது கை மணிக்கட்டிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து இலங்கை கடற்படையினர், வேகமாக அங்கிருந்து சென்று விட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்ததில் ரத்தம் அதிகளவில் வெளியேறி பிரிட்சோ உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த மக்கள் நீதிகிடைக்கும் வரை பிரிட்சோவின் உடலை வாங்கமாட்டோம் என்று போராட்டத்தில் இறங்கினர். மத்திய அமைச்சர்கள் போராட்ட களத்திற்கு வந்த பிறகு இந்தப் போராட்டம் முடிவிற்கு வந்தது. அப்போது சமாதானம் கூறிய மத்திய அமைச்சர்கள், “இனி தமிழக மீனவர்கள் மீது எந்தத்தாக்குதலும் நடக்காது” என்று மீனவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தனர். அந்த வாக்குறுதி காற்றோடு போயிற்று.. தற்போது மீண்டும் மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய தாக்குதல்

தற்போது, மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீன்பிடிப்பதற்கான தடை முடிந்து கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று(21.6.2017) ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தங்கள் ரோந்து கப்பலை ராமேசுவரம் மீனவர் படகுகளில் மோதியிருக்கிறார்கள். இதனால் மீனவர்கள் படகு சேதமடைந்துள்ளது.

மேலும் கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அதில் இருந்த மீன்களை அபகரித்திருக்கிறார்கள். மேலும், மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனைத் தட்டிக் கேட்ட மீனவர்களைப் படகுகளிலேயே கட்டி வைத்து இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மீனவர்களை தொடர் சித்திரவதை செய்திருக்கிறார்கள். மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் மீனவர்களை விடுவித்தனர்.

தாக்குதலில் காயம் அடைந்த ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் பழனிக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகுகளில் மோதினர். மேலும் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி எங்களைக் கண்மூடித்தனமாக தாக்கினர். இனிமேல் இப்பகுதியில் மீன் பிடிக்க வந்தால் சிறைபிடிப்போம். உங்கள் படகுகளை நாசம் செய்வோம்” என்று கூறினர் என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *