இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரில் நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
ஐ.எஸ்.எல். கால்பந்துத் தொடரின் நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் 17 போட்டிகள் விளையாடி முடித்துள்ளனர். இன்னும் ஒரு போட்டி மட்டுமே அனைத்து அணிகளுக்கும் மீதமுள்ள நிலையில் பெங்களூரு அணி மட்டும் தனது பிளே-ஆஃப் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. 17 போட்டிகளில் விளையாடி அதில் 12 வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூரு அணி 37 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் புனே அணியும், மூன்றாவது இடத்தில் சென்னை அணியும் 29 புள்ளிகளுடன் உள்ளன.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்ற கோவா அணி 17 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 27 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. [இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னர் கோவா அணி 6ஆவது இடத்தில் இருந்தது.](https://www.minnambalam.com/k/2018/02/28/3) இந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பினை கோவா அணி இழந்திருக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் சீசனுக்குப் பின்னர் மீண்டும் பிளே-ஆஃப்பிற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ள நிலையில் அதிலும் வெற்றி பெற்று கோவா அணி அரையிறுதியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
�,