~மீண்டும் திரையில் இணையும் ‘திரு-இந்திரா’ ஜோடி!

Published On:

| By Balaji

2002 ஆம் ஆண்டு, இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் நடிகர் மாதவன் மற்றும் நடிகை சிம்ரன் இணைந்து கணவன் மனைவியாக நடித்திருந்தனர். இலங்கைப் போரை மையமாக வைத்து ஆழமான திரைக்கதையுடன் வெளியாகி இருந்த அந்தத் திரைப்படம், அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்திருந்த மாதவன் மற்றும் சிம்ரன் ஜோடியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்கு முன்பாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்திலும் மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து திரையில் தோன்றத் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “15 வருடங்களைக்கடந்து திரு-வும் இந்திராவும், திரு மற்றும் திருமதி நம்பி நாராயணனாக மாறியுள்ளனர்” என்று குறிப்பிட்டு நடிகை சிம்ரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தில் அவர்கள் இணைய உள்ளனர். நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share