விண்வெளியில் இருக்கும் செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை இந்தியா வெற்றிகரமாக முடித்துவிட்டதாக மார்ச் 27ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தச் சோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை குறிவைத்து நரேந்திர மோடி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மறுபுறம், சோதனையை வெற்றிகரமாக முடித்த விஞ்ஞானிகளை பலரும் பாராட்டி வந்தனர்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஏ-சாட் ஏவுகணையை சோதித்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் சோதனை மிக மோசமானது எனவும், ஏற்றுக்கொள்ளவே முடியாதது எனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடுமையாக சாடியுள்ளது. மேலும், இந்த சோதனையால் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான அபாயம் 44 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா நிர்வாகி ஜிம் ப்ரிடென்ஸ்டைன் பேசுகையில், “இந்தியா சோதனை நடத்திய பிறகு சுற்று வட்டப் பாதையில் 400 சிதைவுத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 60 துண்டுகளை தற்போது கண்காணித்து வருகிறோம். இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான அபாயம் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.�,