வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா மின்மிகை நாடாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, உச்ச நேரங்களில் 3.1 சதவிகிதம் மின்மிகையும், சாதாரண நேரங்களில் 1.1 சதவிகிதம் மின்மிகை இருப்பதாக மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டில் இது பற்றாக்குறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது உச்சநேரத்தில் -3.2 சதவிகிதமும், சாதாரண நேரங்களில் -2.1 சதவிகிதமும் இருந்தது. இந்தப் பற்றாக்குறையானது கடந்த பத்து ஆண்டுகளில் 13 சதவிகிதம் வரை இருந்தது. இந்நிலையில், மாநிலங்களைப் பொருத்தவரை சில மாநிலங்கள் மின்மிகை மாநிலமாகவும், சில மாநிலங்களில் மின்சாரப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு இந்தியாவில் 6.9 சதவிகிதம் மின்மிகையும், கிழக்கு இந்தியாவில் 10.3 சதவிகிதம் மின்சாரப் பற்றாக்குறையும், வடகிழக்கில் 8.3 சதவிகிதம் பற்றாக்குறையும், வடக்கில் 1.8 சதவிகிதமும் இருப்பதாகக் கடந்த ஆண்டில் இருந்தது. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியுஸ் கோயல், கடந்த இரண்டு ஆண்டுகளில் 46,453 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். வரும் 2018ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உள்ள எல்லா கிராமங்களிலும் மின்சாரம் அளிக்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,
>மின்மிகை நாடான இந்தியா
+1
+1
+1
+1
+1
+1
+1