கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மின்சார விநியோகப் பற்றாக்குறை 2017-18 நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
மத்திய மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவின் உச்சபட்ச மின்சாரத் தேவை 2017-18ஆம் ஆண்டில் 1.64 லட்சம் மெகா வாட்டாக இருந்துள்ளது. இதற்கு முன்னர் 2013-14ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1.36 லட்சம் மெகா வாட்டாக இருந்தது. அதாவது இந்தியாவின் உச்சபட்ச மின்சாரத் தேவை ஐந்து ஆண்டுகளில் 20 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. அதேபோல, மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில், 2013-14ஆம் ஆண்டில் 1.30 லட்சம் மெகா வாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்ட நிலையில், 2017-18ஆம் ஆண்டில் 23 சதவிகிதம் கூடுதலாக 1.61 லட்சம் மெகா வாட் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில், இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக பஞ்சாபில்தான் மின்சாரப் பற்றாக்குறை 1,356 மெகா வாட்டாக இருந்துள்ளது. இம்மாலத்துக்கான மின்சாரத் தேவை 10,089 மெகா வாட்டாக இருந்த நிலையில் 13.4 சதவிகிதம் குறைவான அளவிலேயே மின்சாரம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2017-18ஆம் ஆண்டில் இம்மாநிலத்துக்கு மின்சாரப் பற்றாக்குறையோ உபரியோ இல்லை. இந்த ஆண்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் மின்சாரப் பற்றாக்குறை 2,213 மெகா வாட்டாக இருந்துள்ளது. இது அம்மாநிலத்தின் மின்சாரத் தேவையை (20,274 மெகா வாட்) விட 10.9 சதவிகிதம் குறைவாகும்.
�,