விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக சத்தீஸ்கர் மாநிலம் வரை 800 கிலோவாட் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் உயர் மின் அழுத்தக் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியை பவர் கிரிட் நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, செம்மாண்டம் பாளையம், வாய்க்காபாளையம் ஆகிய பகுதிகளில் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு நில அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் கோபுரங்களில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இன்று (ஜூன் 15) மீண்டும் செம்மாண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கோபுரம்அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர், அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டுத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், தொடர்ந்து, மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்து சோமனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”