{மாவோயிஸ்ட் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழப்பு!

Published On:

| By Balaji

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் செரைகேலா கர்ஸ்வன் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 14) மாலை மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதி மேற்கு வங்கத்தின் புரூலியா மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் பகுதியுடன் ஜார்கண்டை இணைக்கும் பகுதியாகும்.

இந்த தாக்குதல் குறித்து மாவட்ட தலைமைக் காவலர் சந்தன் சின்ஹா கூறுகையில், “இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். தகவல் அறிந்து கூடுதல் படைகளுடன் தாக்குதல் நடந்த இடத்துக்குச் சென்றோம். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து பார்க்கையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்பது கண்டறியப்பட்டது” என்றார்.

செரைகேலா துணை கோட்ட காவல் அதிகாரி அவினாஷ் குமாரும் கூடுதல் படைகளுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றுள்ளார். இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் ”மாவோயிஸ்ட்டுகள் இம்மாநிலத்திலிருந்து துடைத்தெறியப்படுகிறார்கள் என்ற விரக்தியில் இதுபோன்று செய்கிறார்கள் என்பது புரிகிறது. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.

இதற்குமுன்பு மே 28ஆம் தேதி ராய் சிந்திரி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 26 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share