மாயாவதியின் பினாமி சொத்து: பறிமுதலும் எதிர்ப்பும்!

Published On:

| By Balaji

மாயாவதியின் சகோதரர் சொத்துகளை வருமான வரித் துறையினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், இது பாஜகவின் திட்டமிட்ட சதிச்செயல் என்று மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவருமான மாயாவதியின் சகோதரர் வீட்டில் நேற்று (ஜூலை 18) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். நொய்டாவில் நடத்தப்பட்ட இச்சோதனையில் அவரது ரூ.400 கோடி மதிப்பிலான வீட்டுமனைக்கான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாயாவதி, தன் மீதும் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக அரசின் இதுபோன்ற சதித் திட்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம். மக்களின் உரிமைக்காகவும், சட்டத்துக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக ரூ.2,000 கோடிக்கு மேல் பாஜக செலவிட்டது. பாஜக வெற்றிபெற்ற பிறகிலிருந்து எதிர்க்கட்சியினர் மீது கடும் தாக்குதல்களை பாஜக நடத்தி வருகிறது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துவிட்டன. பாஜக தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து எதிர்க்கட்சியினரைத் தவறான வழக்குகளின் கீழ் தண்டிக்க முற்படுகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ”முதலில் மத்திய மாநில ஏஜென்சிகள் ஆளும் கட்சித் தலைவர்களின் சொத்துகளைச் சோதனை செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாஜக தலைவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு, ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைச் சோதனை செய்ய வேண்டும்” என்று மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவி விசிதர் லதாவுக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் வீட்டுமனையைக் கையகப்படுத்த டெல்லி பினாமி தடுப்பு அமைப்பு ஜூலை 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில்தான் வருமான வரித் துறை சோதனை நடந்துள்ளது. மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share