மாணவியிடம் அத்துமீறிய கும்பல்: பெற்றோர் போராட்டம்!

Published On:

| By Balaji

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியொன்றில் மாணவியிடம் அத்துமீறிய மர்மக் கும்பலைக் கைது செய்யுமாறு கோரியும், இந்த விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் பெற்றோர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலுள்ள கழிவறைக்குச் சென்றார். அப்போது, சுற்றுச்சுவர் மீது ஏறிய 4 மர்ம நபர்கள் அந்த மாணவி மீது பிளேடை நூலால் கட்டி வீசினர். இதில் அந்த மாணவியின் மேலாடை கிழிந்தது. அந்த நபர்கள் அதனை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். அதன்பின், கழிவறைக்குச் சென்ற மாணவிகள் அந்த மாணவியின் கோலத்தைப் பார்த்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் சுற்றுச்சுவர் குறைந்த உயரத்தில் இருந்ததாலும், கழிவறையில் கூரை இல்லாததாலும், மாணவிகள் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேற்கண்ட சம்பவத்திலும், இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். மற்ற மாணவிகளையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை மீறி, சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் நேராக பள்ளிப்பாளையம் காவல் நிலையம் சென்று, இது பற்றிப் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீசாரும் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இந்த நிலையிலேயே, பள்ளிப்பாளையம் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (ஜூன் 10) பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பள்ளிப்பாளையம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துமீறலில் ஈடுபட்ட மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share