கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியில் இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து சங்பரிவார் அமைப்புகள் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பாரதிய ஜனதாவும் இதில் பங்கேற்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
கேரளாவில் கடந்த 8 மாதத்தில் இந்து இயக்க தலைவர்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொள்கை ரீதியில் சந்திக்க முடியாதவர்கள் கொலை ரீதியில் செயல்படுகிறார்கள். இரட்டை வேடம் போடுவதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளுக்கு நிகராக யாரும் இல்லை.
நெடுவாசல் போராட்டத்தில் மாணவர்களைத் தூண்டி விடுவதே கம்யூனிஸ்டு கட்சிகள்தான். மத்திய அமைச்சர்களை நாங்கள் சந்தித்து மனு கொடுத்த பிறகுதான் அதிகாரிகள் நெடுவாசலுக்கு வந்து ஆய்வு செய்தனர். விவசாயிகளுக்கு பிரச்னை என்றால் முதலில் எதிர்க்கும் கட்சியாக பா.ஜனதாதான் இருக்கும் என அவர் கூறினார்.�,