இந்தியாவில் மாணவர் தங்குமிடங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாகவும், அதன் சந்தை மதிப்பு 100 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
சொத்து ஆலோசனை நிறுவனமான *நைட் ஃபிராங்க்*வெளியிட்டுள்ள ’சர்வதேச மாணவர் சொத்து 2019’ அறிக்கையில், மாணவர்களுக்கான தங்குமிட சொத்துகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் 100 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாகவும், அந்த மதிப்பு விரைவில் 50 பில்லியன் டாலராக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இத்துறையில் அதிக முதலீடுகள் வரும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
மாணவர் தங்குமிடங்களுக்கான தேவை தற்போது 80 லட்சம் படுக்கை வசதி இடமாக (bed spaces) உள்ளது. இந்த அளவு 2025ஆம் ஆண்டுக்குள் 1.4 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மாணவர் தங்குமிடச் சந்தையானது தனியார் அமைப்புகளாலேயே தற்போது அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் இந்த தங்குமிடச் சந்தையில் வெறும் 20 சதவிகிதப் பங்களிப்பை மட்டுமே கொண்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”