டெல்லியைச் சேர்ந்த ஐ.ஐ.டி. மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு,இயற்பியல் – இன்ஜினியரிங் படிக்கும் மாணவன், நித்திஷ் குமார் புர்த்தி. இவர், இன்று (29.03.17) காலை தனக்கு படிக்கப்பிடிக்கவில்லை என்று கூறி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய போலீஸ் ஒருவர் கூறுகையில்,’ நித்திஷ் குமார் புர்த்தி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (29.03.17)காலையில், இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கி இருக்கும் விந்தியாச்சல் ஹாஸ்டலின் நான்காவது மாடியில் இருந்து, குதித்து உள்ளார். அவருக்கு கால் உடைந்துள்ளது. மேலும் நித்திஷ் குமாருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், அவருக்கு இன் ஜினியரிங் படிக்கப் பிடிக்காமல் இருந்ததாகவும், அவருடைய அறைவாசிகள் தெரிவித்தனர்’ என்றார்.
‘நித்திஷின் தற்கொலை முயற்சி நடைபெற்ற போது, விரைந்து செக்யூரிட்டிகளிடம் கூறமுயன்றோம். அதற்குள் நித்திஷ் மாடியில் ஏறி, குதித்துவிட்டதாக தகவல் வெளியானது’ என்றனர், உடன் பயிலும் மாணவர்கள்.
தொடர்ந்து டெல்லியில் படிக்கும் மாணவர்கள் இடையே, தற்கொலை எண்ணம் தலைதூக்குவது, டெல்லி அரசின் மீதும், பல்கலைக் கழகங்களின் மீதும் இருக்கும் நம்பிக்கையைக் குறைத்து, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.�,