மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்திற்கு எதிராகப் பால் வழங்கும் போராட்டம் மேற்கு வங்கம் பாரதிய ஜனதா அறிவிப்பு.
கடந்த மே 26-ஆம் தேதி மத்திய அரசு கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக விற்கத் தடை விதித்தது. இந்தத் தடைஅறிவிப்பைக் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, மற்றும் மேற்குவங்க முதல்வர்கள் ஏற்க முடியாது என அறிவித்தனர். கேரளாவில் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மாணவர் அமைப்புகளினால் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் கேரளாமுழுவதும் 210 இடங்களில் எடுக்கப்பட்டன. மேலும்,மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரளாவில்நடுசாலையில் மாட்டுக்கறி சமைத்து மக்களுக்கு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதற்குப்பதிலடியாக மேற்கு வங்காளத்தில் பால் வழங்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாநில பாரதீய ஜனதா அறிவித்துஉள்ளது.
இந்நிலையில்,,வருகிற 10-ஆம் தேதி கொல்கத்தாவிலும், மாவட்ட தலைநகரங்களிலும் பால் வழங்கும் போராட்டம்நடத்தப்படுகிறது. இதுகுறித்து, மாநில பாரதீய ஜனதா உறுப்பினரும், மேற்கு வங்காள பசு மேம்பாட்டு மையதலைவருமான சுபர்தா குப்தா,காங்கிரசும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டும் கேரளாவில் மாடுகளைக் கொன்று கறிகளைவினியோகம் செய்து சட்டத்தை மீறியுள்ளன. இதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். மாட்டுக்கறிவிநியோகிப்பதற்குப் போட்டியாக பால் வழங்கி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும்,மாநிலம் முழுவதும் ஜூன் 10-ஆம் தேதி இந்தப் போராட்டம் நடைபெறும். கொல்கத்தாவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்திலும், மாவட்டதலைநகரங்களிலும் பால் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,