பிரபல பிரட் தயாரிப்பு நிறுவனமான ‘மாடர்ன் ஃபுட் என்டர்பிரைசஸ்’ எட்டு புதிய வகைகளில் பிரட் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வகைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்து வருகிறது. ‘பி லைக் பிரட் என்ற வாசகத்துடன் இந்நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. உடலுக்குச் சத்தான பல தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவாக இந்த புதிய வகை பிரட் தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசீம் சோனி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது ” இளைய தலைமுறை மற்றும் புதிய பெண் வாடிக்கையாளர்களைப் பெறுவதையே நாங்கள் இலக்காக வைத்துள்ளோம். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஊட்டசத்து மிக்க புதிய பிரட் வகைளை தயாரித்து விற்பனை செய்கிறோம். மும்பையில் 50 சதவிகிதம் விநியோகத்தை அதிகரிக்கவும், அதன்மூலம் 25 சதவிகித வருவாயை அதிகரிக்கவும் இலக்கு வைத்துள்ளோம் “என்று கூறினார்.
இந்த நிறுவனம் ஹெச்.யூ.எல் நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இதன் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து கூறும்போது “ஏற்கனவே சில புதிய வகை பிரட்கள் தென் மாநிலங்கள் மற்றும் கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்நிறுவனம் ஐந்து சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது மும்பையை இலக்காக வைத்து புதிய வகைகள் அறிமுகம் செய்கிறது. இந்நிறுவனத்தை 2006-ல் வாங்கும்போது, இதன் மதிப்பு ரூ.450 கோடியாக இருந்தது. 2021ஆம் ஆண்டுக்குள் இதன் மதிப்பை ரூ.1000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.�,”