தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் பொறுப்பேற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராகக் கடந்த மாதம் 26ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதங்கள் நடைபெற்று வருகின்றன. வேதாந்தா நிறுவன வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி தன் வாதத்தை முன்வைத்து வருகிறார். அப்போது ஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனம் உள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தம் 67 ஆலைகள் உள்ளன. ஆனால், ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? மாசு ஏற்படுத்தியதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதபோது ஆலையை மூட உத்தரவிட முடியாது என்று ஸ்டெர்லைட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நான்கு கட்ட வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்ட வாதம் நேற்று (ஜூலை 16) மீண்டும் நடைபெற்றது.
அப்போது, “ஸ்டெர்லைட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை அரசு கொடுக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் கடல்மட்டத்தின் அளவிலே இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையால்தான் நிலத்தடி நீர் மாசு படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதை ஏற்க முடியாது. நிலத்தடி நீரில் உப்பு நீர் புகுந்து விடுவதால் நீர் மாசடைகிறது. 1989-1994ஆம் ஆண்டுகளில் புவியியல் துறை நடத்திய ஆய்வுகள் இதை உறுதிபடுத்தியுள்ளன. தூத்துக்குடியில் அதிக மாசு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தூத்துக்குடி அனல்மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால்தான் அனைத்து மாசுகளும் ஏற்படுகிறது என்பதை ஏற்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் வேதாந்தா சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”