13 இடங்களில் நடைபெறவுள்ள மறுவாக்குப்பதிவு தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேற்று (மே 11) சந்தித்து மனு அளித்துள்ளார் திமுக சட்டத் துறைச் செயலாளர் கிரிராஜன்.
அதில், “தருமபுரி தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளை பாமகவினர் கைப்பற்றியதாலும், மற்ற 3 வாக்குச்சாவடிகளில் குளறுபடிகள் நடந்ததாலும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், துணை ராணுவப் படையின் பாதுகாப்பை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும். மறுவாக்குப்பதிவு ஆரம்பித்தது தொடங்கி வாக்குப் பதிவு எந்திரத்தை சீலிடும் வரையிலான நடைமுறைகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அதனை வீடியோவாகவும் பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“மறுவாக்குப்பதிவு நடைமுறைகளைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திலும் சிறப்புப் பார்வையாளரை நியமிக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப் பதிவு மையத்தில் வாக்காளர்களை எக்காரணத்தைக் கொண்டும் தொடர்புகொள்ள தடை விதிக்க வேண்டும்” என்றும், மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
.
[ டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/11/55)
.
[ மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/11/24)
.
[ ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/10/74)
.
.
[ திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/11/35)
.
[ இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/11/31)
.
�,”