மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தலாம் – உச்ச நீதிமன்றம் அனுமதி!

public

தேசிய அளவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தவேண்டும் என இந்திய மருத்துவக்கவுன்சில் பரிந்துரை செய்தது. இதற்கான முயற்சிகளைச் சுகாதாரத்துறை முன்னெடுத்தது. இந்நிலையில் நுழைவுத்தேர்வு கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடைவிதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. எனினும், நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெறும்; அதுவரை தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *