மருத்துவமனைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி: எதிர்ப்பு!

Published On:

| By Balaji

வரும் 31ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று வற்புறுத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது அரசு மருத்துவர்கள் சங்கம்.

2015ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் திட மற்றும் திரவ மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென்று கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கில், தமிழகத்தில் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றாமல் 715 மருத்துவமனைகள் செயல்படுவதாக அறிக்கை சமர்ப்பித்தது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

தமிழகத்தில் செயல்படும் 51 அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்பட 365 மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிச் சான்று இல்லாமல் செயல்படுவதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, கடந்த வாரம் சென்னையிலுள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் மே 31ஆம் தேதிக்குள் அனைத்து மருத்துவமனைகளும் உரிய அனுமதியைப் பெற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.

இம்முடிவுக்கு அரசு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, நேற்று (மே 19) செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. “தமிழகம் முழுவதும் 60,000க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 30 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகள் 10 சதவிகிதம். அங்குதான் அதிக அளவில் உயிரிக் கழிவுகள் வெளியேறும். அத்தகைய மருத்துவமனைகளை மட்டும் உரிய அனுமதி பெறுமாறு நிர்பந்திக்காமல், அனைத்து மருத்துவமனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏற்புடையதல்ல” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share