பெரும்பாலானவர்களுக்கு உடலிலும் முகத்திலும் மருக்கள் தோன்றுவது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அவர்கள் அழகு குறைந்துவிட்டதாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கவன குறைவாக இருந்தால், மருக்கள் உடல் முழுவதும் பரவி விடும். இது போன்ற மருக்களை எளிதாகவும் விரைவாகவும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நீக்க முடியும்.
*வீட்டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்தே மருக்களை நீக்கலாம். சிறிதளாவு பூண்டை மசித்து அதை மருக்கள் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் எரிச்சல் ஏற்படும். ஆனால், விரைவில் மருக்கள் மறைந்து விடும்.
*பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இடம்பெறும் நெயில் பாலிஷ் மூலமும் மருக்களை நீக்கலாம். கை மற்றும் கால்களில் உள்ள மருக்கள் மீது நெயில் பாலிஷை தடவி உலர வைக்க வேண்டும். பின்னர் நெயில் பாலிஷ் தானாக நீங்கும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் விரைவி்ல் நீங்கும். முகத்தில் பயன்படுத்த வேண்டாம்.
*ஆப்பிள் சிடார் வினிகரை மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் மருக்கள் தானாக விழுந்துவிடும்
*இஞ்சியை சுத்தமாக கழுவி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உறங்க செல்லும் முன் அதை மருக்கள் மீது தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு தடவி வந்தால், மருக்கள் நீங்கி விடும்.�,