ஒரு கப் காபி
புத்தர் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு மனிதர் மிகுந்த கோபத்துடன் கூட்டத்துக்குள் நுழைந்தார். அவர் ஒரு தொழிலதிபர். அவருடைய பிள்ளைகள் புத்தரிடம் அதிக நேரம் செலவிடுவதாகவும், அந்த நேரத்தைத் தொழிலில் செலவிட்டால் மேலும் மேலும் பணம் சம்பாதிக்கலாம் என்பது அவரது எண்ணம். கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு மனிதரிடம் தினசரி நான்கு மணி நேரம் வீணடிப்பது அர்த்தமற்றது என அவர் நினைத்தார்.
இதனால் கடும் கோபத்துடன் அவர் புத்தரிடம் வந்து நின்றார். கோபத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாமல் புத்தரின் முகத்தில் அறைந்தார். புத்தரோ புன்னகைத்தார். அவரை சுற்றியிருந்த சீடர்கள் ஆத்திரப்பட்டாலும் புத்தர் எவ்வித கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. புத்தர் அமைதியாக இருந்ததால் சீடர்களும் கோபத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அனைவரும் கைகளைக் கட்டிக்கொண்டு அமைதி காத்தனர்.
தொழிலதிபர் புத்தரை அறைந்ததற்கு புத்தரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாதது தொழிலதிபரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முகத்தில் அறைந்ததற்குப் புன்னகைத்த மனிதரை அவர் அப்போதுதான் முதன்முறையாகக் கண்டார். அவர் அந்த இடத்திலிருந்து புறப்பட்டார். அவரால் அன்றிரவு உறங்க முடியவில்லை. அடுத்த நாள் அவர் புத்தரிடம் சென்று அவரது பாதத்தில் விழுந்து தன்னை மன்னித்துவிடும்படி கேட்டார்.
அதற்கு புத்தரோ, “என்னால் உன்னை மன்னிக்க முடியாது” என்று தெரிவித்தார். அதைக் கேட்ட தொழிலதிபரும் சீடர்களும் அதிர்ச்சியுற்றனர். “நீங்கள் எந்தத் தவற்றையும் செய்யாதபோது நான் ஏன் உங்களை மன்னிக்க வேண்டும்?” என்று புத்தர் வினவினார். அதற்கு தொழிலதிபரோ, “உங்களை முகத்தில் அறைந்து தவறிழைத்தது நான்தான்” என்று தெரிவித்தார்.
அப்போது புத்தர், “என்னை அறைந்த நபர் இப்போது இங்கு இல்லை. என்னை அறைந்த நபரை நான் கண்டால் அவரை மன்னிப்பேன். இப்போது இங்கு இருக்கும் நபர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகையால் உங்களை மன்னிக்கத் தேவையில்லை” என்று கூறினார்.
தனது தவற்றை உணர்ந்தவரை குற்றவாளி போல் நடத்தி மன்னிப்பது முறையல்ல. அவர் குற்றத்தை உணர்ந்தவர் என்பதை மனத்தில் கொண்டு அவரது தற்போதைய நிலையை அடிப்படையாக வைத்து மன்னிப்பதே சரியானதாக இருக்கும்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
�,”