மத்திய பணிக்கு தாவும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் – முழு பின்னணி

Published On:

| By Balaji

தமிழக உளவுத் துறை ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட ஒன்பது தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை தங்களுடைய பணிக்காலத்தில் மத்திய அரசுப் பணிக்கு செல்ல வேண்டும். அதன்படி, மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு மாநில அரசின் சார்பில் அனுமதி வழங்கப்படும். ஆனால் மத்திய அரசு பணிக்கு செல்வதும், செல்லாததும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சியின் போது மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் 10 அதிகாரிகளின் பெயர் பட்டியலை கொடுத்தால், பத்து மாதங்களுக்கு பிறகே அதில் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எனவே அந்த செய்திகளுக்கு மீடியாக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது விருப்பம் தெரிவித்த அனைத்து அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

தமிழக உளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்ட பத்தாவது நாளிலேயே பணியாளர் நலன் ஐஜியாக மாற்றட்டார். தற்போது அவர் உள்பட ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துறை இணை இயக்குனராக இருந்த ஜி. வெங்கடராமன், திருப்பூர் மாநகர கமிஷனராக இருந்த சஞ்சய் மாத்தூர், மதுரை சரக டிஐஜி ஆனந்த் குமார் சோமணி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த கே.எஸ். நரேந்திரன் நாயர், ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பி. விஜயகுமார் ஆகியோரும் அரியலூர் மாவட்ட எஸ்.பி, அனில் குமார், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏ. சரவணன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர எஸ். பிதாரி ஆகியோருக்கும் அனுமதி வழங்கபட்டுள்ளது. இதில் சில அதிகாரிகள் மட்டும் மாநில பணியிலேயே நீடிப்பார்கள் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே தருமபுரி எஸ்பியாக இருந்த அஸ்ரா கார்க் உட்பட மூன்று அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல சிறந்த அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel