]மதுரை: 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!

Published On:

| By Balaji

திருமங்கலத்தில் கெட்டுப்போன 500 கிலோ ஆட்டிறைச்சியை நேற்று பறிமுதல் செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அதை மண்ணில் புதைத்து அழித்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதாரமின்றியும், கெட்டுப்போன இறைச்சியும் விற்கப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலையடுத்து, திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று (நவம்பர் 21) ஆய்வு மேற்கொண்டனர். இதில், ராஜாஜி தெருவில் உள்ள முகமது ராஜா என்பவர் கடையில் பதப்படுத்தப்பட்ட 300 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், பல்வேறு கடைகளில் ஆய்வு செய்துபோது, 200 கிலோ ஆட்டிறைச்சி உட்பட மொத்தம் 500 கிலோ இறைச்சியை சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மண்ணில் புதைத்து அழித்தனர்.

கடந்த 17ஆம் தேதியன்று, ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் வைக்கப்பட்டிருந்த 2,100 கிலோ இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், மதுரையில் நடந்துள்ள இந்தச் சம்பவமும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share