}மதவாதத்துக்கு எதிராக புதிய இயக்கம் : கி.வீரமணி

public

திராவிடக் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் மதவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்படுவதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் திராவிடக் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் மதவாதத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கியபோது அவர் பேசுகையில், மாநில உரிமை, மதச்சார்பின்மை, சமூக நீதியைக் காக்க ஜனநாயக பாதுகாப்பு உரிமை கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் தொடங்கப்படவுள்ளது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகும். பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். மதச்சார்பின்மை, சமூக நீதி என்ற இருபெரும் முக்கியப் பிரச்னைகளில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு எதிராகச் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் பாஜக செயல்படுகிறது.

அயோத்தியில் ரூ.151 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் ரூ.15 கோடியில் அத்தகைய கண்காட்சியை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அரசானது சமூகநீதிக்கு எதிராக திட்டமிட்டு செயல்படக்கூடியது என்பதை வெளிப்படையாகவே காட்டியுள்ளது. எனவே, இதுபோன்ற வி‌ஷயங்களில் மாநில உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மையைக் காக்க அனைவரும் இணைந்து ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0