மண்டலப் புற்றுநோய் மையங்கள் விரைவில் செயல்படும்!

public

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிப்ரவரி 4ஆம் தேதி உலகப் புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, அரசும் மாணவர்களும் மருத்துவர்களும் இணைந்து, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறார்கள்.

உலகப் புற்றுநோய் தினத்தையொட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வுப் பேரணி இன்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. இந்தப் பேரணியில் மருத்துவ மாணவர்களும் செவிலியர்களும் கலந்துகொண்டார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புற்றுநோய் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலூன்களைப் பறக்கவைத்துப் பேரணியைத் தொடங்கிவைத்தார்,. தமிழகம் முழுவதும் சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையங்கள் விரைவில் செயல்படத்தொடங்கும்” என அமைச்சர் தெரிவித்திருந்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *