மணிப்பூர் முதலமைச்சர் மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

public

மணிப்பூர் மாநில முதலமைச்சர் மகன் அஜய் மீத்தாய் இளைஞர் ஒருவரை சுட்டுக்கொ ன்ற வழக்கில் இம்பால் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அண்மையில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் அங்கு பிரென்சிங் முதலமைச்சராக உள்ளார். இவருடைய மகன்தான் அஜய் மீத்தாய்.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அஜய் மீத்தாய் மணிப்பூர் நெடுஞ்சாலையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவரை முந்திக்கொண்டு மற்றோரு கார் வேகமாக சென்றது. இதனால், கோபமடைந்த அஜய் மீத்தாய்க்கும் காரை ஓட்டிச்சென்ற ஐரோம்ரோஜர் என்ற இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த அஜய் மீத்தாய் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஐரோம்ரோஜரை சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை மணிப்பூர் மாநிலம் இம்பால் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட ஐரோம்ரோஜரின் பெற்றோர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. அதனால், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் அங்கு பிரென்சிங்கின் மகன் அஜய் மீத்தாய் மீதான இந்த கொலை வழக்கை விசாரித்துவந்த இம்பால் நீதிமன்றம் அஜய் மீத்தாய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதலமைச்சர் அங்கு பிரென்சிங்குக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே போல, ஒரு இளைஞரைக் கொலை செய்த குற்றத்துக்கு வெறும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *