]மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தும்!

Published On:

| By Balaji

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மஞ்சளுக்குப் புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை உண்டு என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது புற்றுநோய். வயது வித்தியாசமின்றி, பாலினப் பாகுபாடின்றி, யாருக்கு வேண்டுமானாலும், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புற்று நோய்க்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். இருப்பினும் புற்றுநோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப் பலவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘மஞ்சள்’ நரம்புகட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

`நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக்கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்று நோயாக மாறுகிறது. இந்தக் கொடிய நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். இந்தப் புற்று நோய் பாதித்த சிறிது காலத்தில் காது கேளாமை, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட உடல் குறைபாடுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கூறியுள்ளார். இவர் வெஸ்ட் மோர் லேண்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். இவர் மஞ்சளில் உள்ள சிறிய ரசாயன பொருட்கள் இந்த வகை புற்றுநோயை குணப்படுத்தும். மேலும் புற்று நோய் மருந்துகளில் மஞ்சளைச் சேர்க்கலாம் என நிபுணர் தம்மாரா பரிந்துரைத்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment