ஆயுதக் கலாச்சாரம் என்றால் அது அமெரிக்காதான். எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை நீட்டும் அமெரிக்க கலாச்சாரம் இப்போது அந்நாட்டையே அச்சுறுத்துகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் ஒர்லாண்டோ என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப்பிறகு, அந்த நாட்டு அதிபர் ஒபாமா இதுதொடர்பான தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.
அதிகரித்துவரும் துப்பாக்கி கலாச்சாரமே அங்கு அதிக வன்முறைகள் நடப்பதற்கான காரணமாகவும் உள்ளது. மேலும், அமெரிக்காவில் மக்களைவிட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அதுல் தாக்கூர் என்பவர் நடத்திய ஆய்வை www.gunpolicy.org வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், உலகளவில் 178 நாடுகளில் பொதுமக்கள் துப்பாகிகளைப் பயன்படுத்துவதில் அமெரிக்காவே முதல் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிற பொதுமக்களின் எண்ணிக்கை 270,000,000 இருந்து 310,000,000 வரை உள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பல ரகங்களில் வைத்துள்ளார்கள்.
அதுல் நடத்திய ஆய்வில், சுழல் துப்பாக்கிகள் (ரைஃபிள்ஸ்) வைத்திருப்போரின் எண்ணிக்கை 110,000,000 ஆகும். சிறியவகைத் துப்பாக்கிகள் (ஷார்ட் கன்ஸ்) வைத்திருப்போரின் எண்ணிக்கை 86,000,000 ஆகும். மற்றும் கைத்துப்பாக்கிகள் (ஹேண்ட் கண்) வைத்திருப்போரின் எண்ணிக்கை 114,000,000.
மேலும் அந்த ஆய்வில், உலகின் மற்ற நாடுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையையும் தெரிவித்துள்ளது. அதில், அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக துப்பாக்கிகள் பயன்படுத்தும் நாடாக ஏமனும் (54.8%), மூன்றாவதாக சுவிட்சர்லாந்தும் (45.7%), அடுத்ததாக பின்லாந்து (45.7%), செர்பியா (37.8%), சைப்ரஸ் (36.4%), சவுதி அரேபியா (35.0%), ஈராக் (34.2%), உருகுவே (32.6%), ஸ்வீடன் (31.6) என இருக்கிறது. சரி, இந்தியாவில் எத்தனைபேர் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள்? உலகின் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் துப்பாக்கிகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 3.4% பேர்தான்.
�,