|போலீஸ் மானிய கோரிக்கை: எடப்பாடி போட்ட உத்தரவு!

Published On:

| By Balaji

சட்டமன்றத்தில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில், காவல் நிலையங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரில் இன்று (ஜூலை 19) முக்கிய துறையும் முதல்வரின் துறையுமாகிய காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. மானியக் கோரிக்கைகளின் மீது எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வரே நேரடியாகப் பதிலளிப்பதோடு, காவல் துறை சம்பந்தப்பட்ட பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். முதல்வருக்கு நெருக்கடி அளிக்கும் வகையிலான பல கேள்விகள், துணைக் கேள்விகளுடன் திமுக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல் துறை தலைமையிடமிருந்து ஒரு முக்கிய உத்தரவு சென்றுள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “தமிழகம் முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் நேற்று ஓப்பன் மைக் வழியாக வாய்மொழி உத்தரவு சென்றது. அதில், ‘ஜூன் மாதத்தில் பதிவான வழக்குகள், கைது செய்யப்பட்டோர் விவரங்கள் அனைத்தையும் தயாராக எடுத்துவைக்க வேண்டும். காவல் நிலைய எழுத்தர்கள் இரவு 9 மணி (நேற்று) முதல் எப்போதும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும். எந்த வழக்கு குறித்து எப்போது கேட்டாலும் உடனடியாக அதுகுறித்து தகவல்களை அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நேற்று மாலை முதல் காவல் நிலையங்கள் வழக்கத்தை விட அதிக பரபரப்பாகக் காணப்பட்டது. தங்கள் காவல் நிலையத்தில் பதிவான முக்கிய வழக்குகளின் விவரங்களைத் தேடி எடுத்துவைத்துக் கொண்டு மேலிடத்தின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்கள் காவல் நிலைய அதிகாரிகள்.

மேலும், காவல் நிலையங்களில் யாரையும் லாக்-அப்பில் வைத்திருக்கக் கூடாது, முக்கியமான வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை லாக்-அப்பில் வைத்திருக்க நேர்ந்தால் அவர்களை முழு நேரமும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் மேலிடத்திலிருந்து தகவல் வந்துள்ளது. ஏனெனில், காவல் துறை மானியக் கோரிக்கை நடக்கும்போது காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி தற்கொலை என்றோ அல்லது போலீஸ் சித்ரவதையில் கொலை என்றோ செய்தி வந்தால் அது முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் இன்று கட்டாயமாக தங்களது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு போயுள்ளது” என்று கூறுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினமும், நேற்றும் மட்டும் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share