தமிழகத்தில் 16 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 138 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகக் காவல் துறையிலுள்ள 16 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது காவல் துறை தலைமையகம். இதன்படி, சென்னை சரகத்தின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் துணை ஆணையராக இருந்துவந்த கே.பரந்தாமன் திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் எஸ். செந்தில். கடலூர் மாவட்டத் தலைமையகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக என்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளராக ஆர்.வேதரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளராக டி.அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளராக பி.ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ஏ.முருகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் காவ கண்காணிப்பாளராக ஏ.சுஜாதாவும், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ஏ.தங்கவேலுவும், தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பி.முத்துக்கருப்பனும், கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ஜி.கோபியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப் பிரிவு 2ன் கூடுதல் துணை ஆணையராக வி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தின் கூடுதல் கண்காணிப்பாளராக எம்.ஞானசேகரனும், ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக எஸ்.லயோலா இக்னேஷியஸும், சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வடக்கு 2இன் கூடுதல் துணை ஆணையராக வி.சுப்புராஜும், சென்னை காவல் துறை சமுதாய நலப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக எஸ்.வெள்ளத்துரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, சென்னையில் 33 காவல் உதவி ஆணையர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 138 காவல் உயரதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.�,