போலீசாருக்கு எதிரான வழக்குகள்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

public

கடந்த 5ஆண்டுகளில் தவறு செய்த போலீசார்களுக்கு எதிராக பதிவு செய்யாமல் இருக்கும் வழக்குகள் எத்தனை என்று தமிழக மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவை எஸ்.பி.அலுவலகத்தில் காதலர்கள் அளித்த புகாரில், ”பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் சுரேஷ், காவலர் பழனிசாமி ஆகிய இருவரும் எங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டினர். தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த புகாரின் பேரில் தலைமை காவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்தும், காவலர் பழனிசாமியை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து தாமாக முன் வந்து தமிழக மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட இரு காவலர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஜெயசந்திரன், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நேற்று (ஜூன் 24) உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று காவல்துறையினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் எத்தனை, மாமூல் வசூலித்ததற்காக போலீசாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்களை தமிழக டிஜிபி 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணி](https://minnambalam.com/k/2019/06/24/71)**

**[தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/24/44)**

**[பேசியது பேசியதுதான், கருத்தை மாற்றமாட்டேன்: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/06/23/134)**

**[பிக் பாஸ் 3: ஷெரின் ஆர்மி ரெடி!](https://minnambalam.com/k/2019/06/24/23)**

**[அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்](https://minnambalam.com/k/2019/06/23/136)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.