போராட்டம்: மேற்கு வங்கத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு!

Published On:

| By Balaji

அரசியல் வன்முறை மற்றும் மருத்துவர்கள் போராட்டம் குறித்து அறிக்கை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

**அரசியல் வன்முறை**

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும், திருணமூல் காங்கிரஸுக்கும் இடையே தேர்தல் தொடர்பான மோதல்கள் இருந்து வருகின்றன. இதனால் அங்கு அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் ஏற்படுகின்றன. இந்த சூழலில் அரசியல் கொலைகள் மற்றும் வன்முறைகள் குறித்து மேற்கு வங்க அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுபடி, மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 2016ல் 509 ஆக இருந்தது. 2018 ல் 1,035 ஆக அதிகரித்துள்ளது. 2019 ல் மட்டும் 700 க்கும் மேற்பட்ட அரசியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கேற்ப, இறப்பு எண்ணிக்கை 2016 ல் 36 ஆக இருந்தது, 2018 ல் 96 ஆக உயர்ந்தது, 2019ல் இன்றுவரை 26 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசு, கடந்த சில நாட்களாக நடந்து வரும் மருத்துவர்கள் போராட்டம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளது.

**மருத்துவர்கள் போராட்டம்**

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த 10ஆம் தேதி நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, 11ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர், மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் ஜூன் 17ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை 48 மணி நேரத்தில் ஏற்க தவறினால் கலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சூழலில் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக அனைத்து மாநில சட்டமன்றத்திலும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share