<போராடி வென்ற முகுருசா

Published On:

| By Balaji

கத்தார் ஓப்பன் தொடரின் காலிறுதியில் சிமோனா ஹலெப் மற்றும் முகுருசா இருவரும் வெற்றிபெற்று அரையிறுதியில் நுழைந்தனர்.

கத்தார் ஓப்பன் தொடரில் நேற்று (பிப்ரவரி 16) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் ரோமானியா வீராங்கனை சிமோனா ஹலெப், அமெரிக்காவின் சிசி பெல்லிஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் முதல் செட்டில் பெல்லிஸ் ஒரு புள்ளி கூட பெற முடியாமல் தடுமாறினார். எனவே அதிரடியாக விளையாடிய சிமோனா ஹலெப் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டினை கைப்பற்றினார்.

அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் நீண்டநேரம் போராடிய பெல்லிஸ் 4 புள்ளிகளைப் பெற்றார். ஆனால் அவரால் இரண்டாவது செட்டினையும் கைப்பற்ற முடியவில்லை. எனவே இரண்டாவது செட்டிலும் 6-4 என வெற்றி பெற்ற ரோமானியா வீராங்கனை ஹலெப் அரையிறுதிக்குள் நுழைந்தார். நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் தரவரிசையில் 4 ஆம் நிலை வீராங்கனையான முகுருசா, பிரெஞ்சு வீராங்கனை கரோலின் உடன் மோதினார். அதில் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய கரோலின் அதனை 6-3 எனக் கைப்பற்றி முகுருசாவிற்கு அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகுருசா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டினை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் முகுருசா அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel